மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
த்ரிஷாவை மனக்கிறாரா சிம்பு? டி.ராஜேந்தரின் செயலால் வலுக்கும் சந்தேகம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
சிம்பு, த்ரிஷா இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானநிலையில் இன்று சிம்புவின் தந்தை T . ராஜேந்தர் நடந்துகொண்டவிதம் அந்த தகவலை உறுதி செய்வதுபோல் இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 37 வயதாகும் நடிகர் சிம்பு எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்? மணப்பெண் யார் என்ற கேள்வியும், அது குறித்த பல தகவல்களும் பல காலமாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டுத்தான் வருகிறது.
இந்நிலையில் சிம்பு - த்ரிஷா இருவரும் காதலித்துவருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சமூகவலைத்தளங்களில் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்ததலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தரை சந்தித்தனர்.
அப்போது சிம்பு - த்ரிஷா இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டி. ராஜேந்தர் அந்த கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல், தண்ணீரை குடித்துவிட்டு அடுத்த கேள்விக்கு பதில் சொல்ல தொடங்கிவிட்டார்.
டி. ஆரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இருவருக்கும் இடையில் ஒன்றும் இல்லை, திருமணம் இல்லை என்றால், இல்லை என கூறியிருக்கலாமே? ஆனால் அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.