மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறுபடியும் இப்படியாகிட்டாரே.! புதிய கெட்டப்பில் கெத்து காட்டும் நடிகர் சிம்பு.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசத்தலாக நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஆனால் இடையில் சில காலங்கள் சிம்புநடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. பின் தீராத கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அவரது கைவசம் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற பல படங்கள் உள்ளன. வெந்து தணிந்தது காடு படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அடுத்ததாக சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
Shooting in progress…. 🎥#PathuThala pic.twitter.com/8ghqApLijf
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2022
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சிம்பு சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், சற்று உடல் எடை அதிகரித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.