#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் டுவிட்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு! முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே! செம குஷியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. உடல் எடை அதிகரித்ததால், சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அவர் செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக சிம்பு, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு நீண்டகாலமாக தீவிரமாக உடல் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் இதுவரை 20க்கும் அதிகமான எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களிலிருந்து விலகிய சிம்பு இன்று மீண்டும் டுவிட்டரில் இணைந்துள்ளார்.
Atman-SilambarasanTR#Atman #SilambarasanTR #STR pic.twitter.com/6TY4kujAOr
— Silambarasan TR (@SilambarasanTR_) October 22, 2020
இதன் ஸ்பெஷலாக இன்று அவர் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேற்கொண்டுள்ள உடற்பயிற்சி, சிலம்பம், நடனம், யோகா, தற்காப்பு கலை உள்ளிட்டவை அடங்கியுள்ளன. மேலும் இதனைக் கண்ட சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் பெருமளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.