திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே.. சிம்புவா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்திருக்கிறார். இவரின் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து 'சிலம்பரசன்' எனும் பெயர் பெற்றிருக்கிறார்.
சிம்பு சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் தன் தந்தையின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக 'காதல் அழிவதில்லை' திரைப்படத்தில் நடித்தார். மேலும் அலை, கோவில், ஒஸ்தி, வால, போடா போடி, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன், மாநாடு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சிம்பு சில காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இதன் பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படமே இவரின் சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை பெற்று தந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் பத்து தல திரைப்படம் திரையில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், நடிகர் சிம்புவின் வித்தியாசமான லுக்கில் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் சிம்புவா இடது அடையாளம் தெரியவில்லையே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.