மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த மாதிரி பொண்ணைதான் கல்யாணம் செய்வேன்! பளிச்சென போட்டுடைத்த சிம்பு! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரத் துவங்கியுள்ளவர் நடிகர் சிம்பு. இடைப்பட்ட காலங்களில் தொடர்ந்து சரியான படம் அமையாமல், தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த சிம்பு தற்போது மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இறுதியாக அவர் நடித்த மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்று பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அண்மையில் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்பு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தந்தை டி.ராஜேந்தர் மும்முரமாக உள்ளார்.
நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் யுவன் சங்கர் ராஜா. அவர் சிம்பு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும், பதிலுக்கு ஒரு புன்னகையோடு அனைத்தையும் அனுசரித்து போவாராம். எனவே அத்தகைய குணம் கொண்ட ஒரு பெண் தனக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளாராம். இதனைக்கேட்ட ரசிகர்கள் தலைவா சீக்கிரம் உங்க ஆசைப்படி நல்ல பொண்ணு அமையும் என வாழ்த்தி வருகின்றனர்.