மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. சிம்புவின் குட்டி ரசிகையை பார்த்தீர்களா?.. 7 மாத குழந்தை சிம்புவை பார்த்து என்னெல்லாம் பண்ணுது பாருங்களேன்..! வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரை மன்மதன், காதல் மன்னன் என்றும் பலர் அழைப்பர். இதற்கு காரணம் அவர் நடித்த படங்கள் அனைத்தும் காதல் சம்பந்தப்பட்டதாக இருந்ததுதான். விஜய், தனுஷ் வரிசையில் இவருக்கும் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது இவர் சிறப்பான கதைக்களங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். இருதினங்களுக்கு முன்னதாக கூட இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுவருகிறது. இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கேரியரை துவங்கியவர்.
தற்போது வரை தனது திரைப்பயணத்தை தொடங்கி வருகிறார். இவரது படங்களின் வெற்றியை போலவே சர்ச்சைகளும் தொடர்ந்துதான் வருகிறது. ஆனால் தனது மெச்சூரிட்டியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதைப்போல, குட்டி ரசிகர் ஒருவரும் இருக்கிறார்.
இது குறித்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மௌரிகா என்ற 7 மாத குழந்தையின் பேவரட் பாடலாக சிம்புவின் மறக்குமா நெஞ்சம் உள்ளது. அந்த பாடலை டிவியில் போடும்போதெல்லாம் அந்த குழந்தை கால்களை நீட்டி உதைக்கிறது. பேச்சு வராத நிலையிலும், தனது சத்தத்தால் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறதாம்.
இதனை தொடர்ந்து இப்படத்தின் முதல்காட்சிக்கு அந்த குழந்தையை அவரது தந்தை அழைத்து சென்ற நிலையில், அங்கும் கைகளால் தாளம்போட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தந்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோவிற்கு சிம்பு பாராட்டுதலை தெரிவித்துள்ளார். மேலும் லவ் ரியாக்ஷனையும் கொடுத்துள்ளார்.
😍❤️❤️❤️ @iam_parthi https://t.co/E15hp8HehJ
— Silambarasan TR (@SilambarasanTR) September 18, 2022