மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு.?! பத்து தல பட இயக்குநரின் பேட்டியால் ரசிகர்கள் அதிருப்தி.?!



simbus-controversy-about-his-appearance-in-pathu-thala

ஒபேலி. என். கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும், கௌதம் கார்த்திக் துணை கதாநாயகனாகவும் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் 'பத்து தல'. இந்தப்படம் கன்னட திரைப்படமான முப்ஃதியின் ரீமேக்காக எடுக்கப்பட்டதாகும். இப்படத்திற்கான அறிவிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.

சிம்பு

இது போன்ற நிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வழியாக படப்பிடிப்பு வேலையை முடித்து திரைப்படம் வெளிவர தயாராகி இருக்கிறது. மேலும் இந்தப் படத்திலும் சிம்புவால் சில பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

அதாவது சிம்பு கடைசியாக நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாராகி கொண்டிருக்கிறது. அந்த படத்தின் தோற்றத்திலேயே பத்து தல படத்திலும் நடித்திருக்கிறாராம். இயக்குனரும் வேறு வழியின்றி அதே தோற்றத்திலேயே படத்தை முடித்து இருக்கிறார்.

சிம்பு

ஒரு பேட்டியில் பத்து தல படத்தின் இயக்குநர், சிம்புவின் மீதான தனது அதிருப்தியை கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, "சிம்புவை வேறொரு தோற்றத்தில் வைத்தே இந்த படத்தை எடுக்க விரும்பினேன். ஆனால் வெந்து தணிந்தது காடு தோற்றத்திலேயே படத்தை எடுத்து முடித்து விட்டேன். இதனால் எனக்கு ஏமாற்றமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது." என்று கூறியிருக்கிறார்.

மேலும், கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கு பாஸ் என்றும் சிம்பு தன்னுடைய நண்பன் என்றும் சமாளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார். முதலில் பத்துதல படத்திற்கு கௌதம் கார்த்திக் கதாநாயகனாக தயாரிப்பு நிறுவனம் தேர்ந்தெடுத்ததாம். பின்பு சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு தோற்றத்தில் கௌதம் கார்த்திக்  நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.