இளம்பிரபலங்களின் தொடர் மரணங்கள்! கோரதாண்டவமாடும் கொரோனா! வேதனையுடன் நடிகர் சிம்புவெளியிட்ட பதிவு!



simpu-post-about-young-heros-dead-and-corono

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது மேலும் இத்தகைய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது இரண்டாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை 

 மேலும் இது ஒருபுறமிருக்க கடந்த சில காலங்களாகவே இளம்வயது நடிகர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sushanth

அதில், மிகுந்த துயரமான நாட்களாகவே இந்த சில நாட்கள் கடந்து போகிறது. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா, இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும்.  அதுவே என் ஆசையும் எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.