ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
வாவ்.. 46 வயதிலும் சிக்கென யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் சிம்ரன்! வைரல் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மாபெரும் டாப் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என அனைத்து பிரபலங்களுடனும் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. பின் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சிம்ரன் துணை கதாபாத்திரத்தில் மட்டுமின்றி வில்லியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது செம ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் சிம்ரன் தற்போதும் இளமையாக இருப்பதாக கூறி வருகின்றனர்.