மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈரம் பட நடிகை சிந்து மேனனுக்கு இவ்வளவு பெரிய மகளா... வைரலாகும் குடும்ப புகைப்படம்!!
1996ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஹுலியா என்ற திரைப்படத்தில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சமுத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சிந்து மேனன்.
அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடல் பூக்கள், யூத், போன்ற சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். சிந்து மேனன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதனையடுத்து 2010ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் சிந்து மேனனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.