மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்யாணத்துக்கு முன்னாடியே ஆபாச படம் பார்க்காம அதை பத்தி தெரிஞ்சுக்கோங்க - பாடகி சின்மயி ஓபனாக பேசிய வீடியோ வைரல்..!
தென்னிந்திய துறையில் பிரபல பாடகியாக இருந்து வரும் சின்மயி கவிஞரான வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் பரபரப்பாக்கினார். இது தொடர்பான சர்ச்சை இன்று வரை இருக்கும் நிலையில், எந்தவிதமான நீதி கிடைத்ததாகவும் அல்லது விசாரணை நடைபெற்றதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில், சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "முதல்முறையாக உடலுறவு கொள்ளும் நபர்கள் தவறாக புரிந்துகொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு அது தொடர்பாக அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது பெண்களுக்கு இரத்தம் வந்தால் அவர் கன்னித்தன்மையுடையவர் என்று ஆண்கள் கொண்டாடிவருகின்றனர். இது முற்றிலும் தவறானது. ரத்தப்போக்கு பெண்ணின் கன்னித்தன்மையை உறுதிசெய்யாது. இதில் பல்வேறு விஷயங்கள் இருக்கிறது.
இது குறித்த விழிப்புணர்வை அடைவதற்கு ஆண், பெண் இருபாலருமே திருமணத்திற்கு முன்பு பாலியல் கல்வி தொடர்பாக விளக்கமாக தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஆபாசபடங்கள் பார்த்து அதனை தெரிந்துகொள்வது தவறான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.