மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு நாளைக்கு 15 முறை என்னை அப்படி அழைக்கிறார்கள்! புலம்பும் பாடகி சின்மயி!
பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறி, தமிழ் சினிமாவையே கதிகலங்க வைத்தவர் பாடகி சின்மயி. பாடகி சின்மையை தொடர்ந்து பலபெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி பேச தொடங்கினர். இந்நிலையில் பாலியல் குற்றம் கூறிய நாளில் இருந்து இன்று வரை தினமும் குறைந்த பட்சம் 15 பேராவது என்னை ’விபசாரி’ என்று விமர்சிக்கிறார்கள் என்கிறார் பாடகி சின்மயி.
ஹைதராபாத்தில் இலக்கிய அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த ‘மீ டு’ த வே ஃபார்வர்ட்’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சின்மயி. வைரமுத்து மீது இன்னும் சற்றும் கோவம் குறையாதவராய் வைரமுத்துவை கிழித்து தொங்கவிட்டார் பாடகி சின்மயி.
நான் பாலியல் குற்றம் கூறியதில் இருந்து, எனது சினிமா வாய்ப்பை பாழாக்கிவிட்டார்கள், என்னை பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுகின்றனர். தினமும் குறைந்த பட்சம் 15 பேராவது விபசாரி பட்டம் கட்டுகிறார்கள்.
ஒருவேளை நான் பாலியல் குற்றம் கூறிய பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருந்திருந்தால், வைரமுத்துவாள் பாதிக்கப்பட்ட நிறைய பேர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை வெளியே கூறியிருப்பார்கள் என்றார் பாடகி சின்மயி.