திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன கொடுமை சார்... நடிகர் வடிவேல் பாலாஜியின் மனைவி இப்படிப்பட்டவரா.! வெளியான புதிய தகவல்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரோடு இணைந்து பணியாற்றிய இனிமையான தருனங்களையும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகி கிரேஷ் கருணாஸ் ஒரு பேட்டியில் வடிவேல் பாலாஜி பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் வடிவேல் பாலாஜி யார் மீதும் பொறாமை கொள்ளாதவர், எல்லோருடைய திறமையையும் பாராட்டக் கூடியவர்.மேலும் பாலாஜி என்னிடம் ஒருமுறை, என் மனைவிக்கு எதுவும் தெரியாது, அவர் வெகுளியானவர். அதனாலேயே அவரை கடைக்கு என எங்கேயும் போக சொல்ல மாட்டேன், நானே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வேன் என்றாராம் என்று கூறி பாடகி கிரேஷ் கருணாஸ் கூறிவிட்டு அழுதுள்ளார்.