திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"96 படத்தில் பாடகி ஜானகி" - இணையத்தில் வைரலாகும் நீக்கப்பட்ட காட்சி!
அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியான படம் ‘96’. த்ரிஷா முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் வெளியானதில் இருந்து படத்தை பார்த்தவர்கள் தங்களது பள்ளி கால காதலை கண்டிப்பாக நினைவு கூர்ந்திருப்பார்கள்.
பலரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘காதலே காதலே’ என்ற பாடல் தான் அதிகம் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர்களை கதை மூலம் ஈர்த்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
இந்நிலையில் படம் வெளியான 33 நாட்களில் 96 திரைப்படம் தீபாவளி தினத்தன்று மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பானது. இதனால் படகுழிவினார் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
இந்த படத்தில் நடிகை த்ரிஷா ஒரு பாடகியாக நடித்திருப்பார். அதுவும் உண்மையான பாடகி ஜானகி அம்மாவின் பெயரே அந்த படத்தில் த்ரிஷாவின் பெயராக இருந்தது. ஆனால் இந்த படத்தில் பாடகி ஜானகி அவர்கள் ஒரு காட்சியில் நடித்திருப்பது இப்போது தான் தெரியவந்துள்ளது. எடிட்டிங்கில் நீக்கப்பட்ட அந்த காட்சி இப்பொது யூடியூபில் வெளியாகியுள்ளது.