மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அடுத்தவங்க பொழப்ப கெடுக்காதீங்க" அதிதி சங்கருக்கு அறிவுரை அளித்த பிரபல பாடகி..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பெயர் பெற்றவர் ஷங்கர். இவரது மகளான அதிதி சங்கர் தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். முதன்முதலில் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் இதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது போன்ற நிலையில், இவர் நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்களை பாடகர்களை வைத்து பாடாமல் இவரே பாட ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இவர் விருமன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பார் அந்த பாடல் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான் பாட வேண்டும்.
இது குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ஒரு பேட்டியளித்திருப்பார். அவர் கூறியது, "படங்களில் வரும் பாடல்களை பாடகர்கள் தான் பாட வேண்டும். நடிகர்களே பாடலை பாடினால் பாடகர்களுக்கு என்ன மரியாதை. அடுத்தவங்க பொழப்ப கெடுக்க கூடாது என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.