#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன்முறையாக தனது 3 மாத குழந்தையின் வீடியோவை வெளியிட்ட பாடகி ரம்யா! இப்பவே பாடுவதை கேட்டீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாடகி ரம்யா. இவர் பிரபல இசையமைப்பாளர் NSK அவர்களின் பேத்தி ஆவார். மேலும் இவர் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நடிகர் சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த ஜூலை 2020 ல் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து பாடகி ரம்யா மற்றும் சத்யா இருவரும் சமீபத்தில் ஜோடியாக
மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் ரம்யா தனது 3 மாத குழந்தையின் வீடியோவை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை பாடுவது போல சத்தம் எழுப்புகிறது. மேலும் குழந்தைக்கு ரியான் என பெயரிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.