திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உண்மையிலே அவர்தானா.. செம கியூட்டாக இருக்கும் இந்த குட்டி குழந்தை யாருனு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க! மாபெரும் பிரபலமாச்சே!!
திரையுலகில் மாபெரும் பிரபலங்களாக இருக்கும் பலரது அரிய சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அந்த வகையில் தற்போது தலைசீவி பூச்சூடி பெண் குழந்தை போன்று அலங்காரம் செய்துக்கொண்டு சைக்கிள் மேல் அமர்ந்திருக்கும் சிறு குழந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது வேறு யாருமல்ல. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளிலும் 40,000ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அனைவரின் மனதையும் பெருமளவில் கொள்ளை கொண்ட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்தானாம். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தாலும் அழிக்க முடியாத அற்புதங்களாக நிலைத்து நிற்கிறது.
நமது வாழ்க்கையோடு ஒன்றிய பல பாடல்களைப் பாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ள அவர் தற்போது நம்முடன் இல்லை. 2020ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் எஸ்பிபியின் குழந்தை பருவ புகைப்படம் என ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.