மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேத்து வைத்த மொத்த பணத்தையும் கேரளா நிவாரணத்திற்கு கொடுத்த பிரபல பாடகர்! யார் தெரியுமா?
கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் உலகின் பல மூலைகளில் இருந்து கேரளாவிற்கு உதவித்தொகை குவிந்தவண்ணம் உள்ளன. கேரளா நடிகர்கள்கூட அதிக அளவில் நிவாரண தொகை கொடுக்காத நிலையில் தனது மகனின் திருமணத்திற்ககாக சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் நிவாரணமாக தருவதாக பிரபல பாடகர் உன்னி மேனன் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 20ம் தேதி கேரளாவில் பிரமாண்டமாக நடந்த இருந்த இந்த திருமணத்தை சென்னையில் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐய்யப்பன்கோவிலில் வைத்து எளிமையாக நடத்த உள்ளாராம்.
உன்னி மேனன் கேரளா மக்களுக்காக எடுத்த இந்த முடிவை கேட்டு பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.