மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எல்லா துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் உள்ளது.! பெண்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்!" பாடகர் விஜய் யேசுதாஸ்!
மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பின்னணிப் பாடகராக இருப்பவர் விஜய் யேசுதாஸ். இவர் இதுவரை அனைத்து மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் புகழ்பெற்ற பாடகர் யேசுதாஸின் மகன் ஆவார்.
இவர் 2000ம் ஆண்டு வித்யாசாகர் இசையில் வெளிவந்த "மில்லினியம் ஸ்டார்ஸ்" படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இதையடுத்து 2010ம் ஆண்டு மலையாளத்தில் நடிகராகவும் அறிமுகமான விஜய் யேசுதாஸ், தமிழில் மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார். அதில் அவர், "படத்திற்கான வாய்ப்புக்காக ஒருவரைப் பயன்படுத்த நினைப்பது தவறு. இதை சொன்னால் வாய்ப்புகள் போய்விடுமோ என்று அனைவரும் பயப்படுவார்கள்.
இந்தத் தொழிலில் பெண்களுக்கு தான் மிகவும் கஷ்டம். பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் துறையில் மட்டுமில்லை. அனைத்து துறைகளிலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை உள்ளது. மக்கள் மாறுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறியுள்ளார்.