மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பண விஷயத்தால் பொறுப்பிழந்த விஜயா.. குடும்ப தலைவியாகும் மீனா..! அசத்தல் ப்ரோமோ வைரல்.!
விஜய் தொலைக்காட்சியில் கோமதி பிரியா, வெற்றி வசந்த், அணிலா ஸ்ரீகுமார், சல்மான் கான், பிரீத்தி ரெட்டி, சுந்தர் ராஜன், ஸ்ரீ தேவா உட்பட பல சின்னதிரைஉலக நட்சத்திரங்களின் நடிப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் சிறகடிக்க ஆசை.
தனது மகன்களையே வேறுபடுத்தி வன்மத்துடன் பார்க்கும் தாயின் பாசம் கிடைக்கும் பிள்ளை தெருவில் கற்பனை வாழ்க்கையை எண்ணி திரிய, அன்னை வெறுப்பை காண்பித்தாலும் தந்தையின் கண்டிப்புக்கு தலைகுனிந்து செல்லும் மகன் முத்துவின் போராட்டமாக கதை நகருகிறது.
தற்போது வரை 190 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடப்பு வாரத்தில் கடன் வாங்கிய அம்மாவை குடும்பத்தினர் கடிந்துகொண்ட நிலையில், வீட்டின் பத்திரம் மீட்கப்பட்டு மீனாவின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இது விஜயாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, அவர் மீனாவை கண்டிக்கிறார். அடுத்த வாரத்தில் நடக்கப்போவது இதுதான்.