மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. மனுஷன் சூப்பர்யா.! நடிகர் சிவகார்த்திகேயன் செய்துள்ள அசத்தலான காரியம்.! குவியும் வாழ்த்துக்கள்!!
சின்னத்திரையில் மிமிக்ரி மற்றும் தனது நகைச்சுவை திறமையால் அனைவரையும் கவர்ந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். இவர் தனது முயற்சியால் வெள்ளித்திரையில் கால்பதித்து ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறக்கிறார். அவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலடைந்த மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சிவகார்த்திகேயன் பலருக்கும் அமைதியாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறாராம்.
அவர் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி ஆண்சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளாராம். அதாவது அவர் மூன்று வயதுமிக்க ஷேரு என்ற அந்த ஆண் சிங்கத்தை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்துள்ளாராம். சிவகார்த்திகேயன் இதற்கு முன்பே புலி, யானை போன்ற விலங்குகளை தத்தெடுத்து பராமரிப்பு செலவு தொகையை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.