#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா சிவகார்த்திக்கேயனா இது! சூப்பர் ஹீரோவாக சும்மா கெத்து காட்டுறாரே! மிரட்டலான புகைப்படம் இதோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது கலகலப்பான குணத்தால் அப்பொழுதே ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் அதனை தொடர்ந்து சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பின்னர் அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கி சட்டை, எதிர்நீச்சல், ரெமோ, மான் கராத்தே, சீமராஜா போன்ற பல மெகா ஹிட் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் தற்போது ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாகிறார்.
மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், அர்ஜுன்,இவானா போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 20-ஆம் தேதி படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் ஹீரோ படத்தின் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது இதில் சிவகார்த்திகேயன் மாஸ்க் அணிந்து மிரட்டலாக உள்ளார்.
#HeroNewPoster 👍💪 #Dec20 pic.twitter.com/eC9BKhB2Nq
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 28, 2019