மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த நாளில் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த வேற லெவல் பரிசு! இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய ஷிவாங்கி!!
விஜய் தொலைக்காட்சியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி செம ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
அதிலும் புகழுடனும், அஸ்வினுடனும் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஷிவாங்கிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் ஆர்ட்டிகிள் 15 என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷிவாங்கி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி, பரிசு பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஷிவாங்கிக்கு அசத்தலான கேக் ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார். இந்தப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஷிவாங்கி இதை நான் எதிர்பார்க்கவில்லை என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.