திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது.. கதையா.! பங்கமாய் கலாய்த்து சிவகார்த்திகேயன் கேட்ட கேள்வி! வடிவேலு ரியாக்சனுடன் எஸ்கேப் ஆன வெங்கட் பிரபு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் ஹீரோயினாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் படம் இன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். முழுவதும் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று ட்விட்டரில் #AskSK என்ற ஹேஷ்டாக் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். அப்பொழுது, இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனிடம் ப்ரோ நாம எப்போ ஷூட்டிங் போகலாம். அப்பறம் அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா என கேட்டுள்ளார்.
Kadhaiya https://t.co/8petz7Spyf pic.twitter.com/ayfSRozooi
— venkat prabhu (@vp_offl) October 20, 2022
அதற்கு சிவகார்த்திகேயன், ஹலோ விபி சார் ஷூட்டிங் எப்போ வேணாலும் போகலாம். அப்பறம் இந்த கதை எப்ப சார் கேக்கலாம் என சிரித்துகொண்டே கேட்டுள்ளார். தொடர்ந்து அவர், எனக்கு ஒரு கேள்வி கேக்கனும் சார், படத்துல பிரேம்ஜி ப்ரோ கூட நான் என்ன ரோல்ல நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார். அதற்கு ஜாலியாக வெங்கட், என்னது கதையா என்று வடிவேலுவின் ரியாக்ஷனை ரிப்ளை செய்துள்ளார். அந்தப் பதிவு வைரலாகி வருகிறது.