மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சிவகார்த்திகேயன் மனைவியா இது! குழந்தை பிறந்தபிறகு ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படம்!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் தனது கடின உழைப்பால் தீராத முயற்சியால் வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்துள்ள டான் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே தனது மாமா மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.
மகனுக்கு குகன்தாஸ் என பெயர் வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து முதன்முதலாக பொங்கல் தினத்தன்று தனது மகனுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ஆர்த்தியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகு ஆர்த்தி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டதாக கூறி வருகின்றனர்.