மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயலான் திரைப்படம்.! பொங்கல் ரேசில் பங்கேற்க தயாரான சிவகார்த்திகேயன்.!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார். பலர் இவரை தமிழ் சினிமாவின் அடுத்த விஜய், அடுத்த அஜித் என்றெல்லாம் புகழத் தொடங்கி விட்டனர்.
மேலும் இவர் தன்னுடய படத்தை கடந்து வளர்ந்து வரும் பல்வேறு கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படத்தைப் பார்த்து விட்டு பட குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்த சூழ்நிலையில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையின்போது அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்துடன் லால்சலாம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் போட்டி போட்டாலும் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நிச்சயமாக இந்த திரைப்படத்தை வெளியிடலாம் என்று முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.
அதோடு, தற்சமயம் இந்த திரைப்படத்தின் அவுட்புட் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நீங்கள் 2ம் பாகத்திற்கு தயாராகுங்கள் என்று இயக்குனர் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.