திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட..! சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது..? சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க...! வைரல் புகைப்படம்.!
இன்றைய தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது திறமையாலும், விடா முயற்சியினாலும் இன்று புகழின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் நடிகர்.
பலக்குரல் கலைஞனாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் இன்று பல ரசிகர்கள் போற்றும் வெள்ளித்திரை நாயகனாக தமிழ் சினிமாவில் வளம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெறுகிறது.
தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால், திருச்சியில் பிறந்து வளர்ந்து வந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி தாஸ் என்ற தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தாஸ் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், சின்ன வயதில் இருந்தே ஒன்றாகவே வளர்ந்து உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சிறுவயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.