மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் கையிலிருக்கும் இந்த குழந்தை யார்.? இணையத்தில் பரவும் புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் முதன்முதலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இதன் பிறகு படிப்படியாக முன்னேறி வெள்ளி திரையில் கதாநாயகனாக காலடியெடுத்து வைத்தார்.
முதன்முதலில் 'மெரினா' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இதன் பின் பல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை குவித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தற்போது 'அயலான்' திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதன்பின் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிருக்கிறது.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயன் ஒரு குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சுவது போல் புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் ரசிகர்கள் யார் இந்த குழந்தை என்று கமெண்ட் செய்து வந்தனர். இதனையடுத்து அந்த குழந்தை சிவகார்த்திகேயனின் குட்டி ரசிகர் என்று கூறப்பட்டு வருகிறது..