"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
2018 வெற்றிப்பயணம் 2019ல் தொடருமா! சிவகார்த்திகேயன் புத்தாண்டு உரை
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒரு மிமிக்கிரி கலைஞனாக அறிமுகமாகி தனது திறமையால் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும், சொந்த முயற்சியாலும் இந்த அளவிற்கு வளந்துள்ளார் சிவா.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக சீமராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன் கனா படத்தை தயாரித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசியுள்ளார், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2018ம் ஆண்டு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வரவேற்பு தான் நம்பிக்கை தருகிறது. அடுத்து நல்ல முயற்சிகள் எடுக்க உதவுகிறது. என் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி.
நண்பர்கள் மட்டுமே சேர்ந்து நம்பிக்கை அடிப்படையில் எடுத்த கனா படத்திற்கு வரவேற்பு கொடுத்த தற்கும் நன்றி. இந்த மாதிரி நல்ல படைப்புகளை ஆதரிக்கும்போதுதான் இன்னும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும், நம்பிக்கையும் ஏற்படுகிறது.
Wish u all a very happy new year 🤗👍 pic.twitter.com/z2lw0Pybg1
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 1, 2019
2019ம் ஆண்டு எனக்கு நிறைய எதிர்பார்ப்பை தந்துள்ளது. ஏனென்றால் 2019ல் நிறைய படங்களில் நடிக்க போகிறேன். அதுப்பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரியில் வெளியாகிறது என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்."