திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அஜித் மாதிரி எனக்கும் இந்த விஷயம் வேண்டும்" மனம் திறந்த சிவகார்த்திகேயன்..
விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் 2012ம் ஆண்டு "மெரினா" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் "அயலான்" திரைப்படம், ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதில் அவர், "தெலுங்குக்கு பாகுபலி போல் தமிழுக்கு அயலான் இருக்கும் என்று கூறினார். மேலும் அவர் "அஜித் சாரை ஒரு முறை நேரில் பார்த்த போது நீங்க பைக் ரைட் போவீங்களா என்று என்னிடம் கேட்டார். எங்களுக்கு பைக் ரைட் னா அது ஊருக்குள்ள ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறது தான்.
உங்கள மாதிரி எல்லாம் எங்களால் போக முடியாது என்று கூறினேன். அவர் நாடு நாடாக பைக்கில் சுற்றுகிறார். ஆனால் எனக்கு அஜித் சார் பைக் போல் ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டு அவருடன் சுற்றுலா செல்ல வேண்டும்" என்று கூறினார் சிவகார்த்திகேயன்.