திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் பிரபல தமிழ்நடிகர்! கண்கலங்கியவாறு என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 46 வயது நிறைந்த அவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பலரும் கண்ணீருடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் புனித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபட்டது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பெங்களூர் சென்று புனித்தின் குடும்பத்தினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கலங்கியவாறே, புனித் ராஜ்குமார் அவர்கள் ஒருமுறை மேடையில் நான் ரஜினி சார் போல பேசியதை கண்டு என்னை அழைத்து பாராட்டினார். மேலும் அண்மையில் அவருடன் போனில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர், உங்களை ரொம்பப் பிடிக்கும். பெங்களூர் வரும்போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்க என கூறினார். ஆனால் இப்படியொரு நிலையில் அவரது வீட்டிற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை.
என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அவர் திரையில் மட்டும் ஹீரோ இல்லை. உண்மையான வாழ்க்கையிலும் நிறைய நல்ல விஷயங்கள் செய்து ஹீரோவாக இருந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகத்துக்கே ஏற்பட்ட இழப்பு. அவர் என்னை போன்ற மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணம் என கூறியுள்ளார்.