மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசையா? நச்சென நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!



sivakarthikeyan-press-meet

 இயல், இயல், நாடகம், நாட்டியம் என கலைத்துறையில் சிறந்து விளங்கும் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்கபடும்.  அதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது 

அதில் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகிபாபு, சரோஜா தேவி, சவுகார் ஜானகி  சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, ஐசரி கணேஷ்,  கலைப்புலி எஸ் தாணு, டி இமான், தீனா உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

அதனை தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதினை வழங்கி பெருமைப்படுத்தினார். விருது பெறுவோருக்கு 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது.

sivakarthickeyan

 இந்த நிலையில் விருது பெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற நிகழ்வு, மிக மகிழ்ச்சியான தருணம். இந்த விருது இன்னும் அதிகமான நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது. கோட்டைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா என கேட்டதற்கு அவர், எனக்கு அதற்கு ஆசை இல்லை, ஆனால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இன்னும் என்னுடைய திறமையை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.