#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது... டான் படத்தின் புரமோஷனா... குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் சிவகார்த்திகேயன்...
ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின் தனது திறமையாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இப்படம் வருகின்ற மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இந்த வாரம் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ரசிகர்கள் பலரும் என்னது டான் படத்தின் புரமோஷனுக்காகவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.