மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. என்னா வாய்ஸ்! மெல்லிய குரலில் பாடி சொக்க வைத்த நடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தா.! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்களுக்கென தனித்தனியே எக்கசக்கமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 80ஸ் காலகட்டங்களில் டாப் நடிகராக வலம் வந்த சிவகுமாரின் மகன்கள் ஆவர்.
சிவகுமாரின் மகள், சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கை பிருந்தா. இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். பிருந்தா தனது குடும்பத்தினர்கள் பிரபலமாக இருந்தாலும் யாருடைய உதவியுமின்றி தன் முயற்சியால் பாடல்களைப் பாடி பிரபலமாக வேண்டும் என பெருமளவில் முயன்றார். அதற்கு பலனாக 2018 ஆம் ஆண்டு சந்திரமௌலி படத்தில் பாடல் பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து இதுவரை அவர் 5 படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் அவர் அண்மையில் தமிழில் வெளிவந்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் நடிகை ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற 'சொல்' பாடலை பாடிய வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அவரை பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.