#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் இயக்குனராகும் ஹிப்ஹாப் ஆதி! பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரட்டுதே!! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து, தனது பாடலால் பெருமளவில் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத் தொடர்ந்து இயக்குநராக களமிறங்கிய அவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் அப்படத்தின் மூலம் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆதி நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரது படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.
We are very happy to present the first look of #SivakumarinSabadham starring HipHop Aadhi 💥
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) February 10, 2021
Directed by @hiphoptamizha 🎥#HHTEnt pic.twitter.com/qIrxN0c8TJ
இவ்வாறு இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கும் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கவுள்ளார். மேலும் அப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியே கதாநாயகனாக நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.