மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ்.. ஷிவாங்கியிடம் ரசிகர் கொடுத்த கம்ப்ளைன்ட்! அதுக்கு அவர் சொன்ன கியூட் பதிலை பார்த்தீர்களா!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு, தனது சேட்டையால், கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் இதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது பாடல் திறமையால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர்.
ஷிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் டான், உதயநிதி ஸ்டாலினின் ஆர்ட்டிக்கிள் 15 போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் யோகிபாபு மற்றும் மிர்ச்சி சிவா நடிக்கும் காசேதான் கடவுளடா பட ரீமேக்கிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Ohh dho thedi kutitu varen😌🤔 https://t.co/t5cdVWKN6j
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) July 16, 2021
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஷிவாங்கி அவ்வப்போது தான் பாடல் பாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை இணையத்தில் வெளியிடுவார். மேலும் ஷிவாங்கி அண்மையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் ஷிவாங்கி மேடம், நான் ஒரு கம்ப்ளைன்ட் சொல்ல வந்தேன். செல்லமா செல்லமான்னு ஒரு பொண்ணு இருந்தா, அந்த பொண்ணு எனது இதயத்தை திருடி கொண்டு போய்விட்டாள். அவளை கொஞ்சும் கண்டுபுடிச்சி தாங்க ப்ளீஸ் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சிவாங்கி 'ஓ தோ தேடி கூட்டிட்டு வரேன்' என கலகலப்பாக பதிலளித்துள்ளார். .