மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. இப்படியாகிருச்சே! ஹீரோயின் போல மாஸாக உடையணிந்து வந்த ஷிவாங்கிக்கு நேர்ந்த பரிதாபத்தை பார்த்தீங்களா!! வீடியோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது இனிமையான, மென்மையான குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி. உண்மையில் சிறுபிள்ளை போல குணம் கொண்ட அவர் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.
கலகலப்பான அவரது பேச்சிற்கும், சிறுபிள்ளைத்தனமான அவரது செயலையும் மக்கள் ரசித்து பார்ப்பர். அதனைத் தொடர்ந்து ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய டான் படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழா ஒன்றிற்கு சிவாங்கி சென்றுள்ளார். அப்பொழுது அவர் ஹீரோயின் போல நீளமான உடை அணிந்து சென்றுள்ளனர். அப்பொழுது அவர் படிகளில் ஏற முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் அவரை சுற்றி இருந்தவர்களின் உதவியோடு கஷ்டப்பட்டு படியில் ஏறிச் சென்றார். அந்த வீடியோவை சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
https://t.co/hWfHMynrqB
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 8, 2022
Dress attrocities 😜