மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி பிரபலம் தான் இந்த குட்டி குழந்தையா.. வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி.?
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி அசத்தியவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சிக்கு பின் சிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிவாங்கி, தனது நகைச்சுவை திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். புகழ் மற்றும் சிவாங்கியின் அண்ணன் தங்கை சேட்டைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
மேலும் சின்னதுறையிலிருந்து, வெள்ளி திரைக்கு பாடகியாகவும், நடிகையாகவும் களமிறங்கினார். வெள்ளிதிரையில் பல வெற்றி திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார் சிவாங்கி. மேலும் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிவாங்கி தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார். இதன் படி தற்போது இவருடைய குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.