மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நியூ லுக்கிற்கு மாறிய ஷிவாங்கி.! ரசிகர்களை கவர்ந்த கியூட் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இனிமையான குரலால் அனைவர் மனதையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. மேலும் சிறுபிள்ளைபோல இவரது செயலும், வெகுளித்தனமான இவரது பேச்சும் மக்களால் ரசிக்கபட்டது.
ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். மேலும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் ஷிவாங்கி குக்காகவும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேலும் ஷிவாங்கி வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்துள்ளார்.
ஷிவாங்கி எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்க கூடியவர். அவர் தற்போது லேட்டஸ்ட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஹேர்கட் செய்து நியூ லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த வீடியோவை அவர் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் ஷிவாங்கி நியூ லுக்கில் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.