ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
என்னது நடிகர் SJ சூர்யாவுக்கு திருமணமா... வைரல் பதிவிற்கு நடிகர் விளக்கம்...
1999 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ். ஜே. சூர்யா. அதனை தொடர்ந்து குஷி என்ற மெகா ஹூட் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.
இவர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 54 வயதாகும் எஸ். ஜே. சூர்யாவுக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ள எஸ். ஜே. சூர்யா இந்த செய்தி உண்மை இல்லை. நான் திருமணம் பற்றி யோசிக்க கூட இல்லை என தெரிவித்து இருக்கிறார்.மேலும் தற்போது கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும் தான் இருக்கிறது எனவும் கூறி இருக்கிறார் அவர்.