மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட போங்கப்பா.. 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணம் - உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே.சூர்யா..!!
தளபதி விஜய் நடித்த குஷி மற்றும் தல அஜித் நடித்த வாலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இதன் பின்னர் இவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களிலும் வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு 54 வயதாகி வரும் நிலையில், இன்னும் திருமணமாகவில்லை. சில வாரங்களுக்கு முன்னதாக குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், அதனை மறுத்து தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறுவது உண்மையல்ல என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், "நான் ஆபத்தான சில விஷயங்களில் சினிமாவில் துணிந்து இறங்க வேண்டியுள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன்.
அப்படம் வெற்றி பெற்றது. ஒருவேளை படம் தோல்வியடைந்து இருந்தால் என் நிலைமை மோசமாகி இருக்கும். அந்த கஷ்டம் நான் தனியாக இருந்தால் என்னுடனே போயிருக்கும். ஒருவேளை நான் திருமணம் முடித்திருந்தால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை பெரியளவில் பாதித்திருப்பார்" என்று கூறுகிறார்.