மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பர்! 50 கோடி பட்ஜெட்.! மீண்டும் களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா.! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அஜித்தின் வாலி, தளபதி விஜய்யின் குஷி, போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே சூர்யா. பின் அவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபகாலமாக வில்லனாக நடித்து வருகிறார்.
மாநாடு, டான் படங்களில் வில்லனாக அவர் அசத்தியுள்ளார். மேலும் அவர் தற்போது பொம்மை படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும்,
விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்தில் வில்லன் ரோலிலும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கில்லர்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரித்து இயக்கி அதில் அவரே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் 50கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. எஸ். ஜே சூர்யா இறுதியாக 'இசை' என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.