மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தின் மீசையை எடுக்க சொன்ன எஸ்.ஜே சூர்யா...? காரணம் தெரிந்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!?
1999 ஆம் வருடம் எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார், ஜோதிகா, சிம்ரன், விவேக், பாண்டு போன்றவர்கள் நடித்துள்ளனர். தேவா இசையில் வெளியான வாலி திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்து கர்நாடகாவில் 100நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
வாலி திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான விஜய் ஃபிலிம் ஃபார் அவார்ட் நடிகர் அஜித் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறிமுக நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் மாரிமுத்து, அந்த காலகட்டத்தில் வாலி திரைப்படத்தின் துணை இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.
அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் வாலி திரைப்படம் பற்றி மாரிமுத்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், "அந்த படத்தின் ஒரு காட்சியில் சிம்ரன் தனது கணவர் என நினைத்து அண்ணன் அஜித்தை கட்டிப்பிடித்து விடுவார். இதனால் வருத்தமடைந்த சிம்ரன் தனது கணவர் அஜித்துடன் கோபித்துக் கொள்வார். இதன்பின் கணவர் கதாபாத்திரத்தில் இருக்கும் அஜித் தனது மீசையை எடுத்து விட்டு இப்போது குழப்பம் வராது என்று அண்ணாவை பார்க்க செல்லும் போது அவரும் மீசை இல்லாமல் இருப்பார்.
இதுபோன்ற நிலையில், இந்த காட்சி குறித்து அஜித்திடம் எஸ்.ஜே சூர்யா விளக்கிய போது, அஜித் மீசையை எடுக்க மறுத்து மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறியிருக்கிறார். எனவே இந்த காட்சியை வாலி திரைப்படத்தில் காட்சிபடுத்தவில்லை." என்று மாரிமுத்து கூறியிருக்கிறார்.