மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்னை ஹீரோவாக வைத்து படம் எடுத்தால் குறைவான சம்பளத்தில் நடிக்க தயார்" எஸ் ஜே சூர்யா அதிரடி
இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல்துறை வித்தகராக இருப்பவர் எஸ் ஜே சூர்யா. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், "நியூ" படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார்.
மேலும் இவர் அஜித்தை வைத்து "வாலி" படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான "மார்க் ஆண்டனி" படத்தில் இவருக்கு நடிப்பு அரக்கன் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது எஸ்.ஜே சூர்யா தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் வில்லனாக நடிக்க 8கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
மேலும் சிறிய பட்ஜெட் படங்களிலும் வில்லனாக நடிக்க, சம்பளத்தைக் குறைத்து 5கோடி வாங்கி கொள்வதாகவும், ஹீரோவாக தன்னை வைத்து படம் எடுக்கத் துணிந்தால் 3கோடிக்கு நடித்து கொடுப்பதாகவும் காம்போ ஆஃபர் கொடுத்து அசத்தி வருகிறார் எஸ்.ஜே சூர்யா.