அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிப்பின் அரக்கன்? வெளியான அசத்தல் தகவல்!



SJ Surya negative role in AK 63 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

AK 63

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்தத் திரைப்படத்தை அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 26ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அஜித் குமாரின் 63 வது திரைப்படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் கே சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

AK 63

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனதாக பரபரப்பு தகவல் ஒன்று பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் பூஜை கடந்த பொங்கல் பண்டிகை அன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.