ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இதுதான் என் மனைவி.! எனக்கும் தல தீபாவளிதான்.! ஓப்பனாக உடைத்த எஸ்.ஜே சூர்யா!!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் படத்தில் நடித்த தாண்டிக்குடி மலைவாழ் மக்களுடன் இணைந்து திரைப்படத்தை கண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஜே சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தரமான படைப்பு. உலகளாவிய வெற்றி கிடைத்துள்ளது. கலெக்சன் பார்க்கும் படம் பெயர் எடுக்காது. பெயர் எடுக்கும் படம் கலெக்சன் எடுக்காது. ஆனால் இந்தப் படம் இரண்டையும் பெற்றுள்ளது.வார நாட்களையும், மழையையும் தாண்டி திரையரங்குகள் நிறைகிறது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
ராகவா லாரன்ஸ் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், எவ்வளவோ சேவை செய்திருந்தாலும், இப்படியும் நடிக்க முடியும் என சிறப்பாக நடித்துகாட்டியுள்ளார். நான் இயக்குனரானதே நடிகனாக வேண்டும் என்பதற்காகதான். நான் நடிகனான பொழுது எல்லாரும் என்னை கேள்வி கேட்டனர். அப்போது மனசு வலியாக இருக்கும். ஆனால் தற்போது அதை மாற்றியது கார்த்தி சுப்புராஜ்தான் என கூறியுள்ளார்.
மேலும் அப்பொழுது வரும் ஆண்டில் எஸ்ஜே சூர்யா தல தீபாவளியை கொண்டாடுவாரா?? என கேட்டதற்கு, ஜிகர்தண்டா திரைப்படம் எனது பொண்டாட்டி என்றால் இது எனக்கு தல தீபாவளிதான் என கூறியுள்ளார்.