மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாக ரசிகர்கள் மற்றும் துறை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அயலான் திரைப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.