மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது... முகம் வீங்கி இப்படி அலங்கோலமாக இதான் காரணமா? நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்! உண்மையை உடைத்த மருத்துவர்!!
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடலிங் துறையை சேர்ந்த ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து அவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் ரைசா கைவசம் தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப் ஐ ஆர், ஹேஷ்டாக் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் தனது அழகைப் பராமரித்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ரைசா அண்மையில் பேஷியல் செய்வதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அங்கு அவர் தேவையில்லாத சில விஷயங்களை செய்ததால் தனது முகம்முழுவதும் வீங்கி பாதிக்கப்பட்டதாகவும் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார். பின்னர் அந்த மருத்துவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, மருத்துவர் பைரவி தன்னிடம் பேச மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் எனது முகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது என குற்றம்சாட்டி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா பைரவி செந்திலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து பைரவி செந்தில் கூறுகையில், இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது.
இதுபோன்ற, சிகிச்சையை ஏற்கெனவே ஒரு முறை ரைசா எடுத்துக் கொண்டார். பின்னர் தற்போது அதே சிகிச்சை மீண்டும் அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.