ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
திடீரென வீட்டிற்குள் புகுந்த பாம்பு! பதறியடித்து ஓடிய பிக்பாஸ் பிரபலம்! பரபரப்பு சம்பவம்!
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின் ஜெயா தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் பாத்திமா பாபு. அதனைத் தொடர்ந்து அவர் 1996 ஆம் ஆண்டு கல்கி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பாத்திமா பாபு அவர்களுக்கு சென்னை ஐயப்பன் தாங்கல் பத்மாவதி நகரில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் அவர் 20க்கும் மேற்பட்ட முதியவர்களை தங்கவைத்து முதியோர் இல்லம் போல நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திடீரென அந்த வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனைக் கண்ட பெரியவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் பாத்திமா பாபு வீட்டிற்கு விரைந்த அவர்கள் லாவகமாக பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு சாரை பாம்பு எனவும்,அது ஆறடி நீளம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.