மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. நடிகை சினேகா அடுத்ததாக எந்த மாதிரி படத்தில் நடிக்கிறார் பார்த்தீர்களா! வெளிவந்த புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. புன்னகை இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவருக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ள நிலையில், சினேகா சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்தார். பின்னர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறாராம்.
இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் இதற்கு முன்பு பிரசன்னா மற்றும் சினேகா நடிப்பில் வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை இயக்கியவர். மேலும் தற்போது உருவாகும் புதிய படத்திற்கு ”சாட் பூட் த்ரீ” என பெயரிட்டுள்ளனராம். இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் வெங்கட் பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் இப்படம் குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.